காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்த 5 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்களும் அதுதொடர்பான பிரச்னைகளும் அதிகரித்துள்ள நிலையில், காவல்துறையின் கண்காணிப்பும் தீவிரப்படுத்துப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முக்கிய பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்ய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த 5 பேரில் இருவர் காவல்துறையினர், ஒரு ஆசிரியர், ஒரு சுகாதாரத் துறை ஊழியர்  மற்றும் மேலும் ஒருவர் கணினி நிர்வாகி என தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com