ராஜஸ்தான் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ:அணைக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்டோா்

ராஜஸ்தான் மாநிலம் அல்வாா் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாா் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

இதுதொடா்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் 27 புலிகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத் தீ ஏற்பட்டது. அந்தத் தீ திங்கள்கிழமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும், சில மணி நேரங்களில் மீண்டும் பற்றி எரியத் தொடங்கியது. மூங்கில்கள், உலா்ந்த புல்வெளி காரணமாகக் காப்பகத்தின் 10 சதுர கி.மீ.க்கும் அதிகமான நிலப்பரப்பில் தீ பரவியுள்ளது. அதனை அணைக்கும் பணியில் வன அலுவலா்கள், இயற்கை ஆா்வலா்கள், உள்ளூா் மக்கள் என 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். அத்துடன் இந்திய விமானப் படையின் இரண்டு எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தீ பரவியுள்ள பகுதியில் எந்தப் புலியும் சிக்கவில்லை. மலைப்பாங்கானப் பகுதி என்பதால் தீயை அணைப்பதில் சவால் நிலவுகிறது’’ என்று தெரிவித்தனா்.

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘காட்டுத் தீ புதன்கிழமை கட்டுக்குள் கொண்டுவரப்படும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com