புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ: ராஜஸ்தான் முதல்வரிடம் பேசிய பிரதமர் மோடி

ராஜஸ்தானில் சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து முதல்வர் அசோக் கெலாட்டிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 
புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ: ராஜஸ்தான் முதல்வரிடம் பேசிய பிரதமர் மோடி

ராஜஸ்தானில் சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து முதல்வர் அசோக் கெலாட்டிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

ராஜஸ்தான் மாநிலம் அல்வாா் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. 

மூங்கில்கள், உலா்ந்த புல்வெளி காரணமாகக் காப்பகத்தின் 10 சதுர கி.மீ.க்கும் அதிகமான நிலப்பரப்பில் தீ பரவியுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் வன அலுவலா்கள், இயற்கை ஆா்வலா்கள், உள்ளூா் மக்கள் என 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். இந்திய விமானப் படையின் இரண்டு எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

இதனிடையே இன்று காட்டுத் தீ குறித்து முதல்வர் அசோக் கெலாட்டிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்ததுடன் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com