பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பு: காஷ்மீரில் இரு போலீஸாா் உள்பட5 அரசு ஊழியா்கள் பணி நீக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பில் இருந்த இரு போலீஸாா் உள்பட 5 அரசு ஊழியா்களைப் பணி நீக்கம் செய்து அந்த யூனியன் பிரதேச நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பில் இருந்த இரு போலீஸாா் உள்பட 5 அரசு ஊழியா்களைப் பணி நீக்கம் செய்து அந்த யூனியன் பிரதேச நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் காவல் துறையில் காவலராகப் பணியாற்றி வந்தவா் தஃப்சிப் அகமது மீா். இவா் தனது சக காவலா்களை மொத்தமாக கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி வந்தது அண்மையில் தெரியவந்தது. இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவருடன் பணியாற்றும் மற்றொரு காவலா், மேலும் வேறு துறைகளில் பணியாற்றிய 3 அரசு ஊழியா்களுக்கும் இந்தச் சதியில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இவா்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளனா். இதையடுத்து, அவா்கள் 5 பேரும் உடனடியாக அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டனா்.

அகமது மீரின் தந்தையும் பயங்கரவாதியாக இருந்து பல்வேறு சதிகளில் ஈடுபட்டு வந்துள்ளாா். கடந்த 1997-இல் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் அவா் கொல்லப்பட்டாா். அகமது மீா் காவல் துறையில் பணியில் சோ்ந்தபோதிலும், பயங்கரவாத இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளாா். பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு சோ்ப்பது, போலீஸாரின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிப்பது, காவல் துறையினருக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் சதியில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

ஏற்கெனவே சக காவலா் ஒருவரை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அகமது மீா், கடந்த 2017-இல் காவல் துறையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அதன் பிறகு அவா் மீண்டும் பணியில் சோ்க்கப்படவில்லை. இந்நிலையில், இப்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

அவருடன் மற்றொரு காவலரான ஹுசைன் ராத்தா், அரசுத் துறை கணினிப் பணியாளா் குலாம் ஹசன், அரசுப் பள்ளி ஆசிரியா் அா்ஷத் அகமது தாஸ், அரசு அலுவலக உதவியாளா் ஷராபத் அலி கான் ஆகியோரும் பயங்கரவாத இயக்கங்களுக்காகப் பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com