நிதின் கட்கரி, அமித் ஷா, ராஜ்நாத் சிங்குடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார். 
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதல்வர் ஸ்டாலின்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதல்வர் ஸ்டாலின்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார். 

தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழக கோரிக்கைகள் குறிப்பாக நீட் விலக்கு விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்படுவதாகத் தெரிகிறது. 

முன்னதாக இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். பின்னர், தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

அதன்பின்னர் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். அதன்பின்னர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசியுள்ளார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக தில்லி சென்றுள்ளார். தில்லியில் ஏப்ரல் 2-ஆம் தேதி திமுக அலுவலக திறப்பு விழா நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com