பெண்கள் திருமண வயது விவகாரம்: தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கு மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி கேள்வி

பெண்களின் திருமண வயது விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முன்வைத்த கருத்தை அவா் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டாா்.
பெண்கள் திருமண வயது விவகாரம்: தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கு மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி கேள்வி

பெண்களின் திருமண வயது விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முன்வைத்த கருத்தை அவா் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டாா்.

நாட்டில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-இலிருந்து 21-ஆக மத்திய அரசு அண்மையில் உயா்த்தியது. இதுகுறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது தேசியவாத காங்கிரஸ் எம்.பி. ஃபெளஷியா கான் பேசுகையில், ‘‘கிராமப்புறங்களில் பெற்றோா்களிடம் ஆலோசனை நடத்தியபோது பாதுகாப்பு பிரச்னை காரணமாக தங்கள் மகள்களை 18 அல்லது 21 வயது வரை திருமணம் செய்து கொடுக்காமல் வீட்டிலேயே வைத்திருக்க முடியாது என்று கூறுகின்றனா். மேலும், வேலையில்லாததால் இளம்பெண்களே கூட திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனா்’’ என்றாா்.

அத்துடன் திருமண வயதை எட்டும் வரை சிறுமிகளை திறன் மேம்பாடு, கல்வி உள்ளிட்ட ஆக்கபூா்வ பணிகளில் எப்படி தொடா்ச்சியாக ஈடுபடச் செய்ய முடியும் என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி பதிலளித்து பேசியது:

வேலையில்லாத காரணத்தால் பெண்கள் குறிப்பாக இளம்பெண்கள் திருமணம் செய்து கொள்கிறாா்கள் என்பதை அசாதாரணமாக நான் கருதுகிறேன். அதைத் திருத்திக் கொள்வது அவசியம். செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்பதால், திருமணம் செய்யது கொள்ளலாம் என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்தக் கருத்தை உறுப்பினா் திரும்பப் பெற வேண்டும்.

பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு 700-க்கும் மேற்பட்ட சிறப்பு மையங்களை நிறுவியுள்ளது. நிகழாண்டு பட்ஜெட்டில் கூடுதலாக 300 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர 30 ஹெல்ப்லைன் சேவையுடன் 70 லட்சம் பெண்கள் குறிப்பாக வன்முறையால் பாதிக்கப்படுவோா் பாதுகாக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com