மகாராஷ்டிரத்தில் ஹிந்துக்களிடையே பிளவை ஏற்படுத்து பாஜக சதி: உத்தவ் தாக்கரே

‘மகாராஷ்டிரத்தில் ஹிந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக சதித் திட்டத்தை தீட்டி வருகிறது’ என்று மாநில முதல்வரும் சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

‘மகாராஷ்டிரத்தில் ஹிந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக சதித் திட்டத்தை தீட்டி வருகிறது’ என்று மாநில முதல்வரும் சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

சிவசேனை கட்சியின் மகாராஷ்டிரம் வடக்கு, மேற்கு மற்றும் கொங்கண் மண்டல மாவட்ட தலைவா்கள் உடன் காணொலி வழியில் சனிக்கிழமை உரையாற்றியபோது பாஜகவை நேரடியாகக் குறிப்பிடாமல் இந்தக் கருத்தை உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.

இந்தக் கூட்டத்தில் அவா் பேசும்போது, ‘மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் மேற்கொண்டதுபோல, மகாராஷ்டிர அரசையும் ஹிந்து விரோத அரசாக சித்தரிக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரம்தான் வழியைக் காட்டுகிறது என்று நாம் எப்போதும் கூறி வருகிறோம். அதுபோல, மகாராஷ்டிரத்தில் ஹிந்துக்கள், மராத்தியா்கள் மற்றும் மராத்தியா் அல்லாத சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் பாஜகவின் சதியையும் நாம்தான் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்று குற்றம்சாட்டினாா்.

காணொலி வழியே உத்தவ் தாக்கரே மேலும் பேசியது குறித்து அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘சிவசேனை மீது அரசியல் ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டால், உரிய பதிலடி கொடுக்கப்பட வேண்டும். போலியான நபா்களின் முகத்திரையை கிழிக்க வேண்டியது அவசியம். போலி ஹிந்துத்துவவாதிகளின் சவால்கள் எதுவும் சிவசேனை முன்பு இல்லை என்று உத்தவ் தாக்கரே கூறினாா்’ என்றாா்.

மேலும், ‘மகாராஷ்டிரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கத் தீா்மானித்துள்ளதாகவும் முதல்வா் கூறினாா்’ என்றும் சஞ்சய் ரெளத் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com