கரோனா பரவல்: மே 31 வரை கௌதம புத்தா நகரில் 144 தடை உத்தரவு

கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக உ.பி.யின் கௌதம புத்தா நகரில் இன்று முதல் மே 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
கரோனா பரவல்: மே 31 வரை கௌதம புத்தா நகரில் 144 தடை உத்தரவு

கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக உ.பி.யின் கௌதம புத்தா நகரில் இன்று முதல் மே 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,157 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,30,82,345 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 19,500ஆக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 26 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா்.  இந்த நிலையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கௌதம புத்தா நகரில் இன்று முதல் மே 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி யாரும் போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது.

மேலும் பொது இடங்களில் பூஜை மற்றும் நமாஸ் செய்யவும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று கௌதம புத்தா நகர் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் கௌதம புத்தா நகரில் கரோனா பரவல் அதிகரித்ததைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com