தெற்கு அந்தமான் கடலில் மே 6-இல் காற்றழுத்தத் தாழ்வு

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மே 6-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மே 6-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வங்கக்கடலின் தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மே 4-ஆம் தேதி உருவாகவுள்ளது. இது வலுவடைந்து, மே 6-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகவுள்ளது.

இதற்கடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் தீவிரமடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவோ அல்லது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெளிவாகத் தெரியாது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிய பிறகுதான் அதன் நகரும் திசை தெரியவரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com