மனிதர்கள் மட்டுமல்ல...வெப்ப அலையால் பாதிக்கப்படும் பறவைகள்!

இந்த கோடை வெயிலினால் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்களும் வெப்ப அலையால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த கோடை வெயிலினால் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்களும் வெப்ப அலையால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. 

நாடு முழுவதும் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தில்லி, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கிறது. இதனால் வெளியே வர முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

கோடையின் தாக்கத்தினால் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள் உள்ளிட்ட பிற உயிரினங்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பறவைகள் தண்ணீர் மற்றும் உணவு இன்றி தவிக்கின்றன. வெப்ப அலையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு பல பறவைகள் மருத்துவமனைகளில் தஞ்சம் புகுகின்றன. 

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கத்தினால் பறவைகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். 

கடந்த ஒரு வாரத்தில் ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள அறக்கட்டளை மருத்துவமனை ஒன்றில் சுமார் 200 பறவைகள் வெப்ப அலையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

குருகிராமில் உள்ள அறக்கட்டளை மருத்துவமனையின் டாக்டர் ராஜ்குமார் கூறுகையில், 'ஏப்ரல் கடைசி வார தொடக்கத்தில் இருந்து வெப்பத் தாக்குதலால் பறவைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. குருகிராமில் உள்ள சாரிட்டபிள் பறவைகள் மருத்துவமனைக்கு பல பறவைகள் வந்தவண்ணம் உள்ளன. இதுவரை, சுமார் 198 பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன' என்றார். 

இதன் காரணமாக கோடையில் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

தில்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை அதிகமாக உள்ளது. வட மாநிலங்களில் அடுத்த 6-7 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக உயராது. வடமேற்கு இந்தியாவில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தில்லியில் மே 3 ஆம் தேதி மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com