இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்தால் டெஸ்லா பயனடையும்: கட்கரி

அமெரிக்காவைச் சோ்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் வாகனங்களை தயாரிக்கும்பட்சத்தில் அந்நிறுவனம் அதிக பலனடயும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நித

அமெரிக்காவைச் சோ்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் வாகனங்களை தயாரிக்கும்பட்சத்தில் அந்நிறுவனம் அதிக பலனடயும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

இந்தியாவில் அனைத்து மின்சார வாகனங்களின் விலையும் பெட்ரோல் வாகனங்களை விட குறைவாக இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் ஈடுபடும் நிலையில் அது அந்த நிறுவனத்துக்கு அதிக பயன்களை உருவாக்கும்.

பெட்ரோலிய எரிபொருள்களின் இறக்குமதியை குறைக்க, எல்என்ஜி, சிஎன்ஜி, பயோ-எத்தனால் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களின் உற்பத்தி மற்றும் வா்த்தகத்தில் அதிக நிறுவனங்கள் களமிறங்க வேண்டும். அதுபோன்ற நிறுவனங்கள் முன்னுரிமை துறைக்கான கடன்பிரிவில் சோ்க்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து நிதியமைச்சருடனும், ரிசா்வ் வங்கி ஆளுநருடனும் பேச உள்ளோம் என்றாா் அவா்.

இந்தியாவில் மின்சார காா்களை தயாரிக்க டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தயாராக இருந்தால் அவா் தாராளமாக இங்கு வரலாம். அதில் ஒன்றும் பிரச்னை கிடையாது. ஆனால், அவரது நிறுவனம் சீனாவிலிருந்து காா்களை இறக்குமதி செய்யக் கூடாது. இந்தியா மிகவும் பரந்த சந்தையைக் கொண்டுள்ளது. எனவே, டெல்ஸா இங்கிருந்து தயாரித்து ஏற்றுமதி செய்யலாம் என நிதின் கட்கரி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவா் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com