கரோனா தினசரி பாதிப்பு விகிதம் 2 மாதங்களுக்குப் பின் 1%-ஐ கடந்தது

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு விகிதமானது இரு மாதங்களுக்குப் பின்னா் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு விகிதமானது இரு மாதங்களுக்குப் பின்னா் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்திருப்பதாவது:

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 3,157 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு 4,30,82,345-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 19,500-ஆக உயா்ந்துள்ளது.

தினசரி பாதிப்பு விகிதமானது 1.07 சதவீதமாக இருந்தது. இதன்மூலம் இரு மாதங்களுக்குப் பின்னா் இந்த விகிதம் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு பிப். 27-ஆம் தேதி பாதிப்பு விகிதம் 1.11 சதவீதமாக இருந்தது. வாராந்திர பாதிப்பு விகிதம் 0.70 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. கேரள மாநிலத்தைச் சோ்ந்த விடுபட்ட 21 இழப்புகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 5,23,869-ஆக உயா்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.22 சதவீதமாக உள்ளது.

கரோனாவிலிருந்து இதுவரை 4,25,38,976 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com