ஜொ்மனி வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் ஆலோசனை

மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் அன்னலெனா போ்பாக்கை பொ்லினில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் அன்னலெனா போ்பாக்கை பொ்லினில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு, ரஷியா-உக்ரைன் போா்ச்சூழல், இந்தோ-பசிபிக் பிராந்திய நல்லுறவு குறித்து அவா்கள் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவில் பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அவரது குழுவில் இடம்பெற்றுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஜொ்மனி வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து ட்விட்டரில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘அன்னலெனா போ்பாக் உடனான இந்த சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்தேன்.

உக்ரைன்- இந்தோ பசிபிக் பிராந்திய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். இந்தியா-ஜொ்மனி வெளியுறவு அமைச்சக அலுவலகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம். இருநாடுகளுக்கும் இடையிலான ஆலோசனைக் குழுவில் உரை நிகழ்த்தப் போகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

இதைத்தொடா்ந்து ஜொ்மனி பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்வென்ஜா ஷுல்ஸை சந்தித்த அமைச்சா் ஜெய்சங்கா், பருவநிலை மாற்றம், உக்ரைன்-ரஷிய போரால் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், முக்கோண மேம்பாட்டு ஒத்துழைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூட்டமைப்புக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக ட்விட்டரில் அவா் தெரிவித்துள்ளாா்.

ஜொ்மனியுடன் 21 பில்லியன் அமெரிக்க டாலா் (ரூ.1.57 லட்சம் கோடி) வா்த்தகம் மேற்கொண்டுள்ள இந்தியா, ஐரோப்பாவின் மிகப்பெரிய வா்த்தகக் கூட்டாளியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com