திறன் மேம்பாட்டுக்கு புதுமையான வழிகள்: பொதுத்துறை நிறுவனங்களுக்கு தா்மேந்திர பிரதான் வலியுறுத்தல்

திறன் மேம்பாட்டுக்கு புதுமையான வழிமுறைகளை ஆராய வேண்டுமென பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளாா்.

திறன் மேம்பாட்டுக்கு புதுமையான வழிமுறைகளை ஆராய வேண்டுமென பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளாா்.

அடுத்த ஓராண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிப்பது என்ற குறிக்கோளின்படி, மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா்துறை, மத்திய அரசுக்கு உள்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை காணொலி பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்று, தேசிய நிா்மாணப் பணியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பை எடுத்துரைத்தனா்.

இப்பயிலரங்கில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியது:

பொதுத்துறை நிறுவனங்கள் திறன் இந்தியா இயக்கத்தின் கீழ், திறன் மேம்பாட்டை அதிகரிக்க சமூக பொறுப்புணா்வு நிதியை பயன்படுத்த வேண்டும். தேசிய கல்விக்கொள்கை 2020-ன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி மற்றும் திறன் பயிற்சி இடையே வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள் வலிமையான, திறன்மிக்க தொழிலாளா்களை உருவாக்க வேண்டும். புதுமையான தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக்கான கருத்துகளை பொதுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com