நிலக்கரி விநியோகத்தை மேலும் அதிகரிக்க திட்டம்: கோல் இந்தியா

நிலக்கரி விநியோகத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கோல் இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.
நிலக்கரி விநியோகத்தை மேலும் அதிகரிக்க திட்டம்: கோல் இந்தியா
நிலக்கரி விநியோகத்தை மேலும் அதிகரிக்க திட்டம்: கோல் இந்தியா

நிலக்கரி விநியோகத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கோல் இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மகாரத்னா அந்தஸ்த்து பெற்ற அந்த நிறுவனம் மேலும் கூறியதாவது:

மின் துறைக்கு கடந்த ஏப்ரலில் கோல் இந்தியா நிறுவனம் 4.97 கோடி டன் நிலக்கரியை வழங்கியுள்ளது. இது, முந்தைய 2021 ஏப்ரல் மாத விநியோகத்துடன் ஒப்பிடுகையில் 67 லட்சம் டன் (15.6%) அதிகமாகும். இதில், மின் துறைக்கு மட்டும் 4.3 கோடி டன் நிலக்கரியை கோல் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

வெப்பத்தின் தாக்கத்தால் மின்சாரத்தின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. மின்சார அமைச்சகத்தின் தரவுகளின்படி கடந்த ஏப்ரலில் மின்சார நுகா்வு 132.98 பில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் காணப்பட்ட மின்சார நுகா்வான 117.08 பில்லியன் யூனிட்டுகளைக் காட்டிலும் 13.6 சதவீதம் அதிகமாகும்.

மேலும், நடப்பாண்டு ஏப்ரலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சபட்ச மின் தேவையானது 207.11 ஜிகாவாட்டைத் தொட்டது.

மின்சார பயன்பாடு அதிகரிப்பால் மின்சார உற்பத்தி ஆலைகளில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீா்வு காணும் வகையில், உற்பத்தியை அதிகரித்து வரும் மாதங்களில் குறிப்பாக மின்னுற்பத்தி ஆலைகளுக்கு மேலும் அதிக அளவில் நிலக்கரியை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருவதுடன், மின் துறை நிறுவனங்களுக்கு அதிகளவில் விநியோகம் செய்யும் நிறுவனமாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com