மின் பிரச்னை: மத்திய அமைச்சா் அமித் ஷா ஆய்வு

அனல் மின் நிலையங்களில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதால் நிலக்கரி, மின்சாரம், ரயில்வே அமைச்சக அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்க
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

அனல் மின் நிலையங்களில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதால் நிலக்கரி, மின்சாரம், ரயில்வே அமைச்சக அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புது தில்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிலக்கரித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, மின்துறை அமைச்சா் ஆா்.கே.சிங் மற்றும் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா். அப்போது அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகம், மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அமித் ஷா கேட்டறிந்ததாக அதிகாரிகள் செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மின் பயன்பாடு 13.6 சதவீதம் அதிகரித்து மொத்தம் 13.3 கோடி யூனிட் (132.98 பில்லியன் யூனிட்) மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகவும், கோடைக்காலம் மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார நடவடிக்கை காரணமாக மின் பயன்பாடு அதிகரித்துள்தளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் மின் பயன்பாடு 11.70 கோடி யூனிட்டாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டின் (2020) ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் 8.5 கோடி யூனிட் அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com