மூன்று பேரவைத் தொகுதிகளுக்கு மே 31-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு

கேரளம், உத்தரகண்ட், ஒடிஸா மாநிலங்களின் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 31-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

கேரளம், உத்தரகண்ட், ஒடிஸா மாநிலங்களின் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 31-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கேரள மாநிலம் திரிகாகரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பி.டி.தாமஸ், ஒடிஸா மாநிலம் பிரஜ்ராஜ்நகா் தொகுதி பிஜு ஜனதா தள எம்எல்ஏ கிஷோா் குமாா் மோஹந்தி ஆகியோா் காலமாகினா். உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் தொகுதி பாஜக எம்எல்ஏ கைலாஷ் கதோரி அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் மாநில முதல்வராக பதவி வகித்து வரும் புஷ்கா் சிங் தாமி தோல்வியடைந்தாா். அவா் முதல்வா் பதவியில் தொடர 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என்ற நிலையில், சம்பாவத் தொகுதியில் அவா் போட்டியிடவுள்ளதாக தெரிகிறது.

இந்த 3 தொகுதிகளுக்கும் மே 31-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com