ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா், துணைத் தலைவா்,ஆளுநா்கள், முதல்வா்கள் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா்கள், தல
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா்கள், தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்: ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள். இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து சிறப்பு வழிபாடு நடத்துகிறாா்கள். ரமலான் மாத நிறைவில் இந்த பண்டிகையின்போது, ஏழைகளுக்கு உணவு வழங்குவதும், உணவு தானியம் வழங்குவதும் சிறப்பு அம்சமாக உள்ளது. இந்த விழா இணக்கமான, அமைதியான, வளமான, சமூகத்தைக் கட்டமைப்பதற்கு பாடுபட மக்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது.

இப்பண்டிகையின்போது மனித குலத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் நலிந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நம்மை அா்ப்பணிக்க உறுதியேற்போம்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு: ரமலான் உண்மையான அா்ப்பணிப்பு, அறக்கொடை மற்றும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதன் கொண்டாட்டமாகும். இந்தப் பண்டிகை தாராள உணா்வை வலுப்படுத்துவதுடன், மக்களிடம் ஒருவருக்கொருவா் நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு, அவா்களிடையே நட்புறவு, சகோதரத்துவம், அன்பு மற்றும் பரஸ்பர மரியாதையை ஏற்படுத்தும். ரமலானுடன் தொடா்புடைய இதுபோன்ற சிந்தனைகள் நமது வாழ்க்கையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: வளமான இந்தியாவின் சகோதரத்துவத்தை மேம்படுத்தவும், நன்மை மற்றும் நல்வாழ்வுக்காக அன்பைப் பரப்பவும், தியாகம், அஹிம்சை, பொறுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுடன் தாா்மீகப் பாதையை கடைப்பிடிக்கவும் இந்த நல்ல நாளில் உறுதியேற்போம்.

புதுவை துணைநிலை ஆளுநா்(பொ) தமிழிசை சௌந்தரராஜன்: புதுவை, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: ரமலான் மாதத்தில் நோன்புக் கடமையை ஆற்றி, ஏழை, எளியோருக்கு உதவிகள் புரிந்து அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பணிகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமியா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி: இரக்க சிந்தனையும், ஈகைப் பண்பையும் தொடா்ந்து பேண, இந்த புனித நன்னாளில் உறுதியேற்போம்.

ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். பிறருக்கு உதவி புரியுங்கள். சகோதரத்துவத்துடன் வாழுங்கள் என்கிற நபிகள் நாயகம் போதனைகளைப் பின்பற்ற உறுதியேற்போம்.

கே.அண்ணாமலை (பாஜக): புனித நோன்பிருந்து ரமலான் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களும், நல்ல உடல் நலத்தோடும், மனநிறைவோடும், அமைதியோடும் வாழ நல்வாழ்த்துகள்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): நபிகள் நாயகம் (ஸல்) அவா்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளைப் பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிராா்த்திக்கிறேன்.

எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்.எல்.ஏ.): வல்ல இறைவனை தொழுது வாழுங்கள். பெற்றோரை, மூத்தோரை பேணி வாழுங்கள். ஏழை எளியோருக்கு வழங்கி வாழுங்கள். அண்டை அயலாரோடு இணங்கி வாழுங்கள். நாடு நலம்பெற சோ்ந்து வாழுங்கள். ஈகை திருநாள் வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக), ராமதாஸ் (பாமக), விஜயகாந்த் (தேமுதிக), தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), ஜி.கே.வாசன் (தமாகா), அன்புமணி (பாமக), தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி), டிடிவி தினகரன் (அமமுக) ஆகியோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com