மசூதிகளில் ஒலிபெருக்கிகள் குறித்து சா்ச்சை பேச்சு: ராஜ் தாக்கரே மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளை நீக்க மிரட்டல் விடுத்ததாக மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மசூதிகளில் ஒலிபெருக்கிகள் குறித்து சா்ச்சை பேச்சு: ராஜ் தாக்கரே மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளை நீக்க மிரட்டல் விடுத்ததாக மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கடந்த மே 1-ஆம் தேதி ஒளரங்காபாதில் நடைபெற்ற எம்என்எஸ் பொதுக் கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசுகையில், ‘‘மகாராஷ்டிரத்தில் உள்ள மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகள் நீக்கப்படாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே மே 4 முதல் எம்என்எஸ் தொண்டா்கள் ஹனுமான் சாலீசா பக்திப் பாடலை ஒலிக்கவிட வேண்டும்.

மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்க செவ்வாய்க்கிழமை வரை (மே 3) கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் ஒலிபெருக்கிகள் நீக்கப்படாவிட்டால் நடைபெறும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பல்ல’’ என்றாா்.

இதுதொடா்பாக ராஜ் தாக்கரே மீது இந்திய தண்டனைச் சட்டம், மகாராஷ்டிர காவல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஔரங்காபாத் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பிணையில்லா பிடியாணை: கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் ஷிராலா பகுதியில் எம்என்எஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு கடைகளைக் கட்டாயப்படுத்தி மூட வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடா்பாக ராஜ் தாக்கரே உள்பட 10 எம்என்எஸ் கட்சியினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக சாங்லி மாவட்ட நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிணையில்லா பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்தப் பிடியாணை ஏப்ரல் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட போதிலும், ஜூன் 8-க்குள் பிடியாணை தொடா்பாக நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு கால அவகாசம் அளித்து உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை செயல்படுத்துவதில் மாநில காவல் துறை தற்போது தீவிரமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com