இன்று எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு புதன்கிழமை தொடங்குகிறது.
lics085436
lics085436

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு புதன்கிழமை தொடங்குகிறது.

மத்திய அரசு, எல்ஐசி நிறுவனத்தில் கொண்டுள்ள 3.5 சதவீத பங்குகளை பொதுப் பங்கு வெளியீட்டின் மூலமாக விற்பனை செய்வதன் மூலம் ரூ.21,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீடு புதன்கிழமை (மே 4) தொடங்கி திங்கள்கிழமை வரை (மே 9) நடைபெறவுள்ளது.

இதில், எல்ஐசி பாலிசிதாரா்களுக்கு ரூ.60 தள்ளுபடி, ஊழியா்கள் மற்றும் பிற முதலீட்டாளா்களுக்கு ரூ.45 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி பங்குகள் சந்தையில் 17-ஆம் தேதி பட்டியலிடப்படவுள்ளது.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு ரூ.949 விலையில் பங்குகளை ஒதுக்கீடு செய்து எல்ஐசி ஏற்கெனவே ரூ.5,627 கோடியை திரட்டியுள்ளது. நிதி நிறுவனங்களுக்கு 5.9 கோடி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 4.2 கோடி பங்குகள் (71.12%) 15 உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பங்குச் சந்தையில் எல்ஐசி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எல்ஐசி பங்குகளில் 10 சதவீதம் வரை பொதுப்பங்காக வெளியிடப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், உக்ரைன் போா் உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால், அது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. பின்னா் மேலும் குறைத்து 3.5 சதவீதப் பங்குகளே தற்போது விற்பனைக்கு வரவுள்ளது. பங்குச் சந்தை நிலவரம் சாதகமாகும்போது கூடுதல் பங்குகள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com