தில்லியில் கரோனா நிலைமை மோசமாக இல்லை: சுகாதார அமைச்சர்

தில்லியில் கரோனா நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்றும் தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். 
தில்லியில் கரோனா நிலைமை மோசமாக இல்லை: சுகாதார அமைச்சர்

தேசிய தலைநகரில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்றும் தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். 

கரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தேவையா என்று கேட்டதற்கு, கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது, 

அரசு நிலைமையைக் கவனித்து வருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் பெரிய கட்டுப்பாடுகள் தேவையில்லை. தில்லியில் தினமும் ஏராளமான கரோனா சோதனைகள் நடத்தப்படுகின்றன.

தகுதியான மக்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களில் தினசரி  தொற்று 1,200-1,500 வரை மட்டுமே பதிவாகி வருகிறது. தொற்று விகிதம் 5 முதல் 6 சதவிகிதமாகவே உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

மருத்துவமனையில் 10 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் 200-க்கும் குறைவாகவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, இது திருப்தி அளிக்கிறது. மேலும் தற்போது நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்று அவர் தெரிவித்தார். 

தில்லியில் செவ்வாயன்று 1,414 கரோனா தொற்று புதிதாக பதிவாகியுள்ளன, இத்தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com