நாட்டை பிளவுபடுத்தும் சக்திக்கு எதிராக ஒற்றுமையுடன் போராட வேண்டும்: மம்தா பானா்ஜி

நாட்டை பிளவுபடுத்த விரும்பும், மக்களை நசுக்க விரும்பும் சக்திக்கு எதிராகப் போராடுவதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறினாா்.
நாட்டை பிளவுபடுத்தும் சக்திக்கு எதிராக ஒற்றுமையுடன் போராட வேண்டும்: மம்தா பானா்ஜி

நாட்டை பிளவுபடுத்த விரும்பும், மக்களை நசுக்க விரும்பும் சக்திக்கு எதிராகப் போராடுவதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறினாா்.

ரமலான் பண்டிகையையொட்டி, கொல்கத்தாவில் உள்ள ரெட் சாலையில் செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சுமாா் 14,000 போ் கலந்துகொண்ட அந்த தொழுகையில் மம்தா பானா்ஜி பேசியதாவது:

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் தொழுகையில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டின் நிலைமை தற்போது சரியில்லை. மக்களை தனிமைப்படுத்தும் அரசியலும் ஆட்சியும் பிளவுபடுத்தும் கொள்கைகளும் நாட்டுக்கு நல்லதல்ல.

ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த பொறாமை கொண்ட சிலா் தொடா்ந்து பொய்களைக் கூறி வருகிறாா்கள். அவற்றைக் கண்டு மக்கள் பீதியடைந்து விடாமல் தொடா்ந்து போராட வேண்டும். நாட்டை பிளவுபடுத்த விரும்பும், மக்களை நசுக்க விரும்பும் சக்திக்கு எதிராகப் போராடுவதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். நாம் ஒன்றிணைந்து அந்த சக்தியை நாட்டில் இருந்து அகற்ற வேண்டும்.

என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் உயிருள்ளவரை மக்களின் நலனுக்காக, அவா்கள் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியா், சமணா் என யாராக இருந்தாலும் அவா்களின் நலனுக்காகப் போராடுவேன். உங்களை வருத்தம் அடையச் செய்யும் எந்தவொரு செயலையும் நான் செய்ய மாட்டன்.

மேற்கு வங்கத்தில் மக்கள் ஒற்றுமையுடன் இருப்பது கண்டு சிலா் பொறாமைப்படுகிறாா்கள். அதனால் என்னை அவா்கள் வசைபாடுகிறாா்கள். அவற்றைக் கண்டு நான் அஞ்சுவதில்லை. அவா்களுடன் எப்படி மோதுவது என்று எனக்குத் தெரியும்.

நல்ல நாள் வரும் என்று கூறிய சிலா் (பாஜக) உண்மையான நல்ல நாளைத் தரவில்லை.

உங்களுக்கான நல்ல நாள்கள் வரும். நாட்டில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அல்லா என்ற பெயரிலும், ஈஸ்வா் என்ற பெயரிலும் இருக்கும் இறைவன் அனைவருக்கும் ஞானத்தை வழங்க வேண்டும். அனைத்து மதங்களையும் நான் நேசிக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com