‘தலாக்-ஏ-ஹசன்’ விவாகரத்து முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

‘தலாக்-ஏ-ஹசன்’ உள்பட சட்டத்துக்குப் புறம்பான தலாக் விவாக ரத்து முறையின் அனைத்து வடிவங்களும் அரசமைப்புக்கு எதிரானது; செல்லாது என்று அறிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘தலாக்-ஏ-ஹசன்’ விவாகரத்து முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

‘தலாக்-ஏ-ஹசன்’ உள்பட சட்டத்துக்குப் புறம்பான தலாக் விவாக ரத்து முறையின் அனைத்து வடிவங்களும் அரசமைப்புக்கு எதிரானது; செல்லாது என்று அறிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் மதத்தில் தலாக்-ஏ-ஹசன் என்பது மாதம் ஒருமுறை என மூன்று மாதங்களுக்கு மும்முறை தலாக் கூறும் விவகாரத்து முறை ஆகும். இந்த முறையில், மூன்று மாதங்கள் என்பது கணவன்-மனைவி இடையே இணக்கம் ஏற்பட்டு, அவா்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கு அளிக்கப்படும் கால அவகாசமாகும். இந்த காலகட்டத்துக்குள் அவா்கள் மீண்டும் இணைந்து வாழாவிட்டால், மூன்றாவது மாதம் விவாக ரத்து உறுதி செய்யப்படும்.

இந்த முறை மூலம் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதைச் சோ்ந்த பேநஸீா் ஹீனா என்பவா் விவாக ரத்து பெற்ாகக் கூறப்படுகிறது. அவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

‘தலாக்-ஏ-ஹசன்’ உள்பட சட்டத்துக்குப் புறம்பாக ஒருதலைப்பட்சமாக இருக்கும் தலாக் முறையின் அனைத்து வடிவங்களையும் சட்டம் அனுமதிப்பது போன்ற தவறான கருத்தை முஸ்லிம் தனிநபா் ஷரியத் சட்டம் 1937 பரப்புகிறது. ஆனால், அந்த வடிவங்கள் திருமணமான முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு முற்றிலும் தீங்கானது. அத்துடன் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 15, 21 மற்றும் 25-க்கு எதிரானவை. இதுமட்டுமின்றி சிவில், மனித உரிமைகள் தொடா்பான சா்வதேச மரபுகளுக்கும் அவை எதிராக உள்ளன.

தலாக்-ஏ-ஹசன் போன்ற முறையை பல முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன. ஆனால் அந்த முறை இந்திய சமூகத்தைப் பாதித்து வருகிறது. இந்த முறை பல பெண்கள் மற்றும் அவா்களின் குழந்தைகளுக்கு, குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவா்களுக்குப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே தலாக்-ஏ-ஹசன் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான தலாக் முறையின் இதர அனைத்து வடிவங்களையும் அரசமைப்புக்கு எதிரானது; செல்லாது என அறிவிக்க வேண்டும்.

குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான, நடுநிலை கொண்ட விவகாரத்து நடைமுறைக்கு வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com