வெப்ப அலையை எதிர்கொள்ள ஆய்வுக் கூட்டம்: பிரதமர் மோடி ஆலோசனை

மூன்று ஐரோப்பிய நாடுகளில், மூன்று நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: மூன்று ஐரோப்பிய நாடுகளில், மூன்று நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் வெப்பநிலைக்கான தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்குத் தலைமை ஏற்று ஆலோசனை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாட்டின் பல பகுதிகள் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பத்தின் கீழ் தத்தளித்து வருகின்றன. பல இடங்களில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் இரு பகுதிகளும் அதிக வெப்பம் உள்ள நிலையில், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை முறையே 35.9 மற்றும் 37.78 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

தில்லியின் சில பகுதிகளில் புதன்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணியின் கணிப்புப்படி, மே 7-ம் தேதிக்குப் பிறகு வெப்ப அலை திரும்பக் கூடும்.

இந்தியாவில் வசந்த காலத்திலும், கோடையின் தொடக்கத்திலும் வெப்ப அலைகள் பொதுவாகக் காணப்படும். பொதுவாக மே மாதம் வெப்பமான மாதமாகும். ஆனால் மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து செப்டம்பர் வரை பருவமழை தொடங்குவதால் வெப்ப அலை பெரும்பாலும் குறைந்து காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com