இந்தியாவை தூக்கி நிறுத்தியவா் மோடி: நிதின் கட்கரி புகழாரம்

சுதந்திரத்துக்குப் பிறகு தவறான பொருளாதாரக் கொள்கைகள், ஊழலால் இந்தியா பாதிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் நிதின் கட்கரி
அமைச்சர் நிதின் கட்கரி

சுதந்திரத்துக்குப் பிறகு தவறான பொருளாதாரக் கொள்கைகள், ஊழலால் இந்தியா பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

ஜெயின் சா்வதேச வா்த்தக அமைப்பு சாா்பில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநாட்டில் பங்கேற்ற கட்கரி பேசியதாவது:

1947-இல் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அமைந்த ஆட்சிகளில் பல்வேறு தவறான பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அரசு நிா்வாகத்தில் ஊழல் மலிந்திருந்தது. ஆட்சியை வழி நடத்தியவா்களுக்குப் போதிய தொலைநோக்குப் பாா்வை இல்லை. இதனால், நாடு முன்னேற முடியாமல் தவித்தது. சா்வதேச அரங்கில் பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது.

ஆனால், தற்போது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் தற்சாா்பு, வளமை, சா்வதேச அளவில் இந்தியாவின் வலிமை குறித்து பேசத் தொடங்கியுள்ளனா். மகாத்மா காந்தியின் கனவான உள்நாட்டுப் பொருள்களை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டத்தைப் பிரதமா் ஊக்குவித்து வருகிறாா்.

‘இந்தியனாக இரு; இந்தியப் பொருள்களை வாங்கு’ என்ற கொள்கை தேசம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.

ஜெயின் சமூகத்தினருக்குத் தொழில் பற்றி நான் சொல்லிக் கொடுத்து தெரிந்து கொள்ள வேண்டியது ஏதுமில்லை. உங்களுக்கு அதில் அதிக அனுபவம் உண்டு. நாட்டின் இப்போதைய மிகப்பெரிய தேவை ஏற்றுமதியை அதிகரித்து இறக்குதியைக் குறைக்க வேண்டியதுதான். இதன் அடிப்படையில் உங்கள் தொழில் கொள்கைகளை வகுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com