ராகுலை குறிவைக்கிறதா பாஜக? புதிய விடியோ வெளியீடு; இம்முறை வேறு மாதிரி

ராகுலை துரத்திக் கொண்டு செல்வதைபோல, பாஜகவின் ஐடி செல் அவரைப் பற்றிய விடியோக்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்பி அவருக்கு எதிரான அரசியலை தீவிரப்படுத்தி வருகிறது.
ராகுலை துரத்தும் பாஜக: புதிய விடியோ வெளியீடு - இம்முறை வேறு மாதிரி
ராகுலை துரத்தும் பாஜக: புதிய விடியோ வெளியீடு - இம்முறை வேறு மாதிரி

ராகுலை துரத்திக் கொண்டு செல்வதைபோல, பாஜகவின் ஐடி செல் அவரைப் பற்றிய விடியோக்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்பி அவருக்கு எதிரான அரசியலை தீவிரப்படுத்தி வருகிறது.

தற்போது, தெலங்கானாவில் கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி உரையாடும் விடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

ராகுல் காந்தி, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேபாளம் சென்றிருந்த நிலையில், அங்கு நடைபெற்ற கேளிக்கை விருந்தில் பங்கேற்றபோது மிக அருகாமையில் இருந்து எடுத்த விடியோ ஒன்றை பாஜக வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

தற்போது, பாஜகவின் ஐடி செல் தலைவர் அமித் மால்வியா வெளியிட்டிருக்கும் மற்றொரு விடியோவில், ராகுல் காந்தி தெலங்கானாவில் கட்சித் தலைவர்களுடன் உரையாடும் விடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

தெலங்கானாவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ராகுல் காந்தி, முன்னதாக கட்சித் தலைவர்களிடம் ஒரு சின்ன ஆலோசனையை நடத்தினார். அப்போது,  பொதுக் கூட்டத்தில் நான் என்ன பேசவேண்டும்?  என்ன விவகாரங்கள் தொடர்பாக இந்தப் பொதுக் கூடட்ம் நடைபெறுகிறது என்பது குறித்து கேட்டறிந்து கொண்டிருந்தார். 

இதனை பகிர்ந்திருக்கும் அமித் மால்வியா, நேற்று ராகுல் காந்தி, தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு முன்பு, அங்கிருந்த விவசாய சங்கத் தலைவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, என்ன பேச வேண்டும், எது தொடர்பாக பொதுக் கூட்டம் என்று கேட்டறிந்தார். தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம், இரவு கேளிக்கை விருந்துகளுக்கு இடையே அரசியலில் ஈடுபட்டால் இப்படித்தான் நடக்கும் என்று விமரிசித்திருந்தார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, வரும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அனைத்து சமூக வலைத்தளங்களிலும்  செயல்படுமாறு, தனது தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் அனைவரையும் பாஜக அறிவுறுத்தியிருக்க வேண்டும் என்று தெரிகிறது என அரசியல் வட்டாரங்களை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே, நேபாளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுமன்னி உதாசின் திருமணத்தில் பங்கேற்றதை, தேச விரோத செயலாக பாஜக சித்தரித்திருந்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக சுட்டுரையில் ராகுலைப் பற்றிய விடியோக்கள் அணிவகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com