மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது!

தலைநகர் தில்லியில் மதுபானப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அம்மாநில அரசு விரைவில் வெளியிட உள்ளது.
மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது!

தலைநகர் தில்லியில் மதுபானப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அம்மாநில அரசு விரைவில் வெளியிட உள்ளது. 

ஆம், இனி தில்லியில் உள்ள பார்களில் அதிகாலை 3 மணி வரை மதுப்பிரியர்கள் மதுபானத்தை அருந்தி மகிழலாம். ஆனால், இதுதொடர்பாக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. 

2021-22 கலால் கொள்கையின்படி விரைவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

மாற்றப்படும் புதிய நேரங்களைப் பாதுகாப்பாக செயல்படுத்துவதற்காக தில்லி காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களுடன் அரசு ஒருங்கிணைத்து வருவதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக துணை முதல்வர் மனிஷ் சிசோடியோ வியாழனன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், 

உணவகங்கள் மூடும் நேரத்தை அதிகாலை 3 மணி வரை நீட்டிக்குமாறும், இதனால் எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். 

குருகிராம் மற்றும் நொய்டா உள்ளிட்ட என்சிஆர் நகரங்களின் செயல்பாட்டு நேரங்களுக்கு ஏற்ப அதிகாலை 3 மணி வரை உணவகங்களின் இயக்க நேரத்தை அனுமதிக்கும். இதுதொடர்பாக தில்லி காவல்துறை உள்ளிட்ட பிற நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com