எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு: விண்ணப்பங்களை ஏற்க வங்கி கிளைகள் இன்று திறப்பு

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக எஸ்பிஐ மற்றும் ஏ.எஸ்.பி.ஏ. நியமிக்கப்பட்ட வங்கி கிளைகள் ஞாயிற்றுக்கிழமை திறந்திருக்கும்
எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு: விண்ணப்பங்களை ஏற்க வங்கி கிளைகள் இன்று திறப்பு

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக எஸ்பிஐ மற்றும் ஏ.எஸ்.பி.ஏ. நியமிக்கப்பட்ட வங்கி கிளைகள் ஞாயிற்றுக்கிழமை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

எல்ஐசி ஐ.பி.ஓ. வுக்கான ஏலத்தை எளிதாக்கும் வகையில் ஏ.எஸ்.பி.ஏ. விண்ணப்பங்களை செயலாக்க நியமிக்கப்பட்ட அனைத்து வங்கி கிளைகளையும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) அன்று பொதுமக்களுக்காக திறந்து வைக்குமாறு மத்திய அரசு கோரியுள்ளது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எல்ஐசி ஐ.பி.ஓ. விண்ணப்பங்களை ஏற்பதற்காக ஏ.எஸ்.பி.ஏ.க்காக நியமிக்கப்பட்ட அனைத்து வங்கி கிளைகளையும் ஞாயிற்றுக்கிழமை திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி அந்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ அதிகாரப்பூா்வ ட்விட்டா் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

எல்ஐசி ஐபிஓ-வில் பங்குகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளா்களின் விண்ணப்பங்களை ஏற்பதற்காக எங்களது அனைத்து கிளைகளும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு விபரம்:

மே 4-ஆம் தேதி தொடங்கிய எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு திங்கள்கிழமையுடன் (மே 9) நிறைவடையவுள்ளது. மே 17-இல் எல்ஐசியின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிப்படவுள்ளன.

எல்ஐசி நிா்வாக கூற்றுப்படி, பணியாளா்களுக்கு 1.58 கோடி பங்குகளும், பாலிசிதாரா்களுக்கு 2.21 கோடி பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பங்கு வெளியீட்டில் சில்லறை முதலீட்டாளா்களுக்கு ரூ.45, அதேசமயம், பாலிசிதாரா்களுக்கு ரூ.60 தள்ளுபடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com