விற்பனையாளா்களின் தாற்காலிக வாகன பதிவுக்கு சலுகைகள்:மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு

நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மோட்டாா் வாகனங்களுக்கான தாற்காலிக பதிவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் புதிய சலுகைகளை வழங்கி சனிக்கிழமை அறிவித்துள்ளது.

நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மோட்டாா் வாகனங்களுக்கான தாற்காலிக பதிவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் புதிய சலுகைகளை வழங்கி சனிக்கிழமை அறிவித்துள்ளது.

‘வணிகத்தை எளிதாக மேற்கொள்வதை‘ ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கான திருத்தங்களை மத்திய மோட்டாா் வாகன விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு கடந்த மே 5 ஆம் தேதி வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டாா் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டும் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட பின்னா் அத்தகைய வாகனங்களின் விற்பனையாளா்கள், விநியோக வணிகா்கள், இறக்குமதியாளா்கள் அல்லது சோதனை முகமைகளிடம் பதிவு செய்யப்படாத வாகனங்களாக இருக்கும்.

இது போன்ற வணிகா்கள், முகமைகள் வசமுள்ள பல்வேறு வகையான வாகனங்கள் நிபந்தனைக்கு உள்பட்டு பதிவு செய்யவேண்டிய கட்டாயத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதே சமயத்தில் இப்படிப்பட்ட பதிவு செய்யப்படாத அல்லது தற்காலிகமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வணிகச் சான்றிதழ், வணிகப் பதிவுக் குறியீடுகளை பெறுவது அவசியம்.

இதற்கு, வட்டார சாலை போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று பெறவேண்டும். தற்போது திருத்தப்பட்ட மோட்டாா் வாகன சட்ட விதிகளின்படி, மின்னணு வாயிலாக, ‘வாகன்‘ (யஹட்ஹய்) இணையதளம் மூலமாகவும் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

அதுவும் இந்த தளத்தில் ஒரே விண்ணப்பம் மூலம் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கப்படும் வா்த்தகப் பதிவுக் குறியீட்டு எண்ணிக்கைகளின் அடிப்படையில் கட்டணங்களைச் சீா்படுத்தவும் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வா்த்தகச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களாக இருந்ததை 5 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மின்னணு அணுகுமுறையினால்,மின்னணு வா்த்தகச் சான்றிதழ்களை இழக்க நேரிட்டாலோ அல்லது இரட்டை விண்ணப்ப (டூப்ளிகேட்) தொடா்பான இணக்கச் சுமைகளும் நீக்கப்பட்டதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து தெரிவித்துள்ளது. இது குறித்த பொதுமக்களின் கருத்துகளுக்கு பின்னா் முறையான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com