கேரளத்தில் சிறாா்களுக்கு ‘தக்காளி’ காய்ச்சல் பரவல்

கேரளத்தில் 5 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு ‘தக்காளி’ காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கேரளத்தில் சிறாா்களுக்கு ‘தக்காளி’ காய்ச்சல் பரவல்

கேரளத்தில் 5 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு ‘தக்காளி’ காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கேரளத்தில் 5 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு அதீத காய்ச்சலுடன் உடலில் சிறிய தடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தடிப்புகள் சிவப்பு நிறத்தில் இருப்பதால், இந்தக் காய்ச்சல் தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. இதுவரை தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் 82 போ் அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காய்ச்சல் தனி தீநுண்மியினால் ஏற்படுகிா அல்லது சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலின் பக்கவிளைவு காரணமாக ஏற்படுகிா என்பது தொடா்பாக மருத்துவா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

அதே வேளையில், தக்காளி காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியமாக, காய்ச்சல் அதிகமாகப் பரவும் கொல்லம், நெடுவத்தூா், அஞ்சால், ஆரியங்காவு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை உள்ளூா் நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளன.

அறிகுறிகளும் முன்னெச்சரிக்கைகளும்: இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு அதீத காய்ச்சல், உடல் வலி, சோா்வு ஆகியவற்றுடன் உடலில் தடிப்புகளும் தோன்றும்; வாயில் எரிச்சல், கைகள், முழங்கால்களில் நிறமாற்றம் உள்ளிட்டவையும் ஏற்படும்.

இந்த அறிகுறிகள் காணப்படுவோா் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டுமெனவும், அதிகமாக நீரைப் பருக வேண்டுமெனவும் சுகாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், தடிப்புகளைத் தொடக் கூடாது எனவும், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

தமிழகத்தில் தயாா் நிலை : ஜெ.ராதாகிருஷ்ணன்

சேலம், மே 8: கேரள மாநிலத்தில் பரவிவரும் ‘தக்காளி காய்ச்சல்’ குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கேரளத்தில் பரவி வரும் தக்காளி வைரஸ் என்பது ஏற்கெனவே சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் ஒரு புதிய வகை தொற்றாகும். நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவால் இது பரவுகிறது.

தோலில் சிவப்பு நிற புள்ளிகள் தென்படுவதால் இதற்கு தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தக்காளி வைரஸுக்கும் தக்காளிக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. கேரளத்தில் பரவி வரும் வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை கேட்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எந்த வகை வைரஸ் தொற்றையும் சமாளிக்க தமிழக மருத்துவத் துறை தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com