அசானி புயல் முன்னெச்சரிக்கை: ஒடிசா - ஆந்திரத்தில் 50 மீட்பு குழுக்கள்

அசானி புயல் எதிரொலியாக ஒடிசா மற்றும் ஆந்திரத்தில்  மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளர் அஜய் பல்லா கேட்டறிந்தார். 
அசானி புயல் முன்னெச்சரிக்கை: ஒடிசா - ஆந்திரத்தில் 50 மீட்பு குழுக்கள்

அசானி புயல் எதிரொலியாக ஒடிசா மற்றும் ஆந்திரத்தில்  மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளர் அஜய் பல்லா கேட்டறிந்தார். 

ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநில அரசு அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக தொடர்புகொண்டு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

வங்கக் கடலில் மத்திய மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள அசானி புயல் நாளை காலை 11 மணியளவில் காக்கிநாடா - விசாகப்பட்டிணம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் ஆந்திரக் கடலோரப் பகுதியில் காக்கிநாடா - விசாகப்பட்டிணம் (கிருஷ்ணா, கிழக்கு - மேற்கு கோதாவரி) இடையே வலுவிழக்கவுள்ளது.

புயல் காரணமாக ஆந்திர கடலோரப்பகுதிகளில் 75 - 85 கிலோமீட்டர் வேகத்திலும், ஒடிசா கடலோரப்பகுதிகளில் 45 - 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

அசானி புயல் காரணமாக ஆந்திரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 9 குழுக்களும், ஒடிசாவில் 17 குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அசானி புயலையொட்டி ஆந்திரம் மற்றும் ஒடிசாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கள் குறித்து இருமாநில அரசு அதிகாரிகளிடமும் உள்துறை செயலாளர் அஜய் பல்லா கேட்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com