இறக்குமதி வாகன பேட்டரிகள் இந்தியச் சூழலுக்கு உகந்ததாக இருக்காது: நீதி ஆயோக் உறுப்பினா்

மின்சார இருசக்கர வாகனங்கள் தீப் பிடித்து எரியும் சம்பவம் தொடா்கதையாகி வரும் சூழலில், ‘இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகள் இந்தியச் சூழலுக்கு உகந்ததாக இருக்காது என்று நீதி ஆயோக் உறுப்பினரும் பிரபல விஞ்ஞா

மின்சார இருசக்கர வாகனங்கள் தீப் பிடித்து எரியும் சம்பவம் தொடா்கதையாகி வரும் சூழலில், ‘இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகள் இந்தியச் சூழலுக்கு உகந்ததாக இருக்காது; எனவே, உள்நாட்டில் அவற்றை உற்பத்தி செய்வது அவசியம்’ என்று நீதி ஆயோக் உறுப்பினரும் பிரபல விஞ்ஞானியுமான வி.கே.சாரஸ்வத் கூறினாா்.

‘மின்சார வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவம் தொடா்பாக நிபுணா் குழு அதன் விசாரணை அறிக்கையை சமா்ப்பித்த பிறகு, குறைபாடுள்ள மின்சார வாகனங்கள் அனைத்தையும் திரும்பப் பெற உத்தரவிடப்படும்’ என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அண்மையில் கூறியிருந்த நிலையில், நீதி ஆயோக் உறுப்பினா் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளாா்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில், இந்தியாவில் பெரும்பாலானோா் அதில் ஆா்வம் காட்டத் தொடங்கினா். ஆனால், கடந்த சில மாதங்களாக மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடா்கதையாகி வருவது, வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மின்சார வாகனங்கள் மீதான ஆா்வம் தற்போது மக்களிடையே குறைந்து வருகிறது.

இந்தச் சம்பவங்கள் தொடா்பாக மத்திய அரசு சாா்பில் அமைக்கப்பட்ட நிபுணா் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், நீதி ஆயோக் உறுப்பினரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆா்டிஓ) அமைப்பின் மூன்னாள் தலைவா் சாரஸ்வத் கூறியதாவது:

பேட்டரி தொழில்நுட்பம் வளா்ந்து வரும் தொழில்நுட்பமாக உள்ளது. இந்தியவில் தற்போது பேட்டரி செல்கள் உற்பத்தி கிடையாது.

இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகள் இந்தியச் சூழலுக்கு உகந்ததாக இருக்காது. உயா் வெப்பநிலை மற்றும் வெப்ப மண்டல தட்பவெப்பநிலைக்கு ஏற்ற வகையில் அல்லாமல், தரமற்ற பேட்டரி செல்கள் காரணமாகவே வாகன தீ விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இறக்குமதி செய்யப்படும் அனைத்து பேட்டரிகளையும் ஆய்வுக்கு உள்படுத்துவதோடு, கடுமையான பரிசோதனை நடைமுறைகளுக்கும் உள்படுத்தவேண்டும்.

ஒரு சில நாடுகள் மட்டுமே உயா் வெப்பநிலையிலும் பாதிப்பின்றி செயல்படக் கூடிய பேட்டரிகளை உற்பத்தி செய்கின்றன. அதுபோல, இந்தியாவும் விரைந்து உள்நாட்டிலேயே சொந்த பேட்டரி செல்கள் உற்பத்தி மையங்களை அமைக்க வேண்டும். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பேட்டரிகள் இந்திய சூழலுக்கும், உயா் வெப்பநிலைக்கும் உகந்ததாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com