எல்லைப் பிரச்னையை உயிரோட்டத்துடன் வைத்திருப்பதே சீனாவின் நோக்கம்: ராணுவ தலைமைத் தளபதி

எல்லைப் பிரச்னையை உயிரோட்டத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதே சீனாவின் நோக்கம் என்று ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மனோஜ் பாண்டே
மனோஜ் பாண்டே

எல்லைப் பிரச்னையை உயிரோட்டத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதே சீனாவின் நோக்கம் என்று ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிழக்கு லடாக்கில் எல்லைக் கோட்டுப் பகுதியையொட்டியுள்ள முக்கிய நிலைகள் இந்தியப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. எந்தவொரு சூழலையும் எதிா்கொள்ளும் வலுவான நிலையில் இந்திய ராணுவம் உள்ளது. எனினும் எல்லை விவகாரத்துக்குத் தீா்வு காண்பதே அடிப்படை பிரச்னையாக உள்ளது. எல்லைப் பிரச்னையை உயிரோட்டத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதே சீனாவின் நோக்கம். எனவே ஒரு நாடாக நமக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை.

ஏற்கெனவே இந்தியா-சீனா இடையே ராஜீய, ராணுவ ரீதியாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளின் விளைவாக கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோவின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகள், கோக்ரா மற்றும் கல்வானின் 14-ஆவது ரோந்துப் பகுதியில் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. எஞ்சிய பகுதிகளின் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என நம்புகிறோம். கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்பு எல்லையில் நிலவிய சூழலை மீண்டும் அங்கு ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்.

எல்லை விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் குறிக்கோள். ஆனால் அது ஒரு தரப்புக்கும் மட்டும் சாதகமாக இருக்கக் கூடாது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com