தேசத் துரோக சட்டம் மறு ஆய்வு செய்யப்படும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தேசத் துரோக சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
பேரறிவாளன்: 'மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் எடுக்கும்'
பேரறிவாளன்: 'மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் எடுக்கும்'

தேசத் துரோக சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

ஆகையால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தேசத் துரோக சட்டம் செல்லுபடியாகும் என 1962-ஆம் ஆண்டு கேதா்நாத் சிங் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பு அளித்திருந்தது. இதை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை (மே 10) விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் மிருத்யுஞ்சயகுமாா் நாராயண் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாா். அதில், ‘ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின் காலாவதியான 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் ரத்து செய்யப்பட்டன. ஆங்கிலேயா்களின் காலனித்துவ சட்டங்களையும் நடைமுறைகளையும் ஒழிக்க வேண்டும் என்றும் பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

மனித உரிமை ஆா்வலா்கள், சமூக செயற்பாட்டாளா்கள் ஆகியோா் தேசத் துரோக வழக்குக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. நாட்டின் இறையாண்மையும், ஒற்றுமையையும் கவனத்தில்கொண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ பிரிவை (தேசத் துரோகம்) மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆகையால், அந்தப் பிரிவு செல்லுபடியாகுமா என்பதில் உச்சநீதிமன்றம் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசு முன்பு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், ‘60 ஆண்டுகளுக்கு முன்பு தேசத் துரோக வழக்கை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், இதை தற்போது மறுபரிசீலனை செய்வதற்கான அவசியம் எழவில்லை’ என்று தெரிவித்திருந்தது.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த எதிா் தரப்பு மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘தற்போதைய மாறி வரும் காலத்துக்கு ஏற்ப முந்தைய 5 நீதிபதிகள் அமா்வின் தீா்ப்பை தற்போது மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்கலாம்’ என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com