பாக்.கில் இருந்து போதைப்பொருளுடன் பறந்து வந்த ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எஃப்

பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஹெராயின் போதைப்பொருளுடன் பறந்துவந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தினா்.
’பஞ்சாபில் பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா சிறுரக விமானம்.’

இதுதொடா்பாக, ட்விட்டரில் எல்லைப் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து பறந்துவந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹெராயின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அந்த ஆளில்லா விமானம், சுமாா் 10 கிலோ எடையுள்ள 9 ஹெராயின் போதைப் பொருள் பொட்டலங்களை சுமந்து வந்துள்ளது. அந்த போதைப் பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தானிலிருந்து இந்தியப் பகுதிக்குள் போதைப் பொருள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com