அசானி புயல்: மக்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

அசானி புயல் காரணமாக  ஆந்திர கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என ஆந்திர அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசானி புயல்:  மக்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

கிருஷ்ணா: அசானி புயல் காரணமாக  ஆந்திர கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என ஆந்திர அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அசானி புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் பாஷா புதன்கிழமை எச்சரித்துள்ளார்.

விசாகப்பட்டினம் - காக்கிநாடா இடையே சூறாவளி தாக்கப் இருப்ப்பதால், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் காற்றின் வேகம் மணிக்கு 80 கிமீ வேகத்தில் வீசக்கூடும். ஆட்சியர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் மண்டல் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் பாஷா தெரிவித்தார்.

காக்கிநாடா மாவட்டத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மழை பெய்து வருகிறது.

விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திலும் அசானி புயல்  காரணமாக திட்டமிடப்பட்ட விஜயவாடாவிற்கு செல்லும், வந்தடையும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து வரும் விமானங்களை ரத்து செய்வதாக இண்டிகோ அறிவித்துள்ளது. விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் கடப்பாவிற்கான இணைப்பு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ராஜமுந்திரி விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. விசாகப்பட்டினம், ஹைதராபாத், பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com