அசானி புயல் எதிரொலி: 22 விமானங்கள் ரத்து

‘அசானி” தீவிரப் புயல் காரணமாக 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் கே. ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அசானி தீவிரப் புயல் காரணமாக 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ‘அசானி” தீவிரப் புயல், வடக்கு-வடகிழக்கு திசையில் வடஆந்திரம் -ஒடிஸா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகா்ந்து புதன்கிழமை காலை 11 புயலாக வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக விசாகப்பட்டினத்திற்கு வருகை மற்றும் புறப்பாடு உள்பட 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் கே ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘அசானி’ தீவிர புயல் செவ்வாய்க்கிழமை காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, காக்கிநாடாவுக்கு தென்மேற்கே 210 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் வடஆந்திரம் -ஒடிஸா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது புதன்கிழமை புயலாக வலுவிழக்கக்கூடும். புயல் காரணமாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திர கடற்கரை பகுதி, ஒடிஸா கடற்கரை மற்றும் அதனையொட்டிய மேற்குவங்க கடற்கரை பகுதிகளில், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை (மே 11), வியாழக்கிழமை (மே 12) ஆகிய இரண்டு நாள்களுக்கு மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டா் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் செல்லவேண்டாம் என்றும், ஆந்திரம் மாநில மாவட்டங்களில் 150 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும், கனமழை பெய்யும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திரத்தில் இன்று நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் மே 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினத்திற்கு வருகை மற்றும் புறப்பாடு உள்பட 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் கே ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சென்னை வரும் மற்றும் புறப்பாடு விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 6 விமானங்களும், ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேலும் சென்னையில் இருந்து மும்பை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும்ம் 5 விமானங்கள் என 17 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து அந்தமானிற்கு புதன்கிழமை காலை 8.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் காலை 11.30 மணிக்கும், 8.30 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் மதியம் 1 மணிக்கும் காலதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அசானி புயல் எச்சரிக்கை காரணமாக நேற்று சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஹைதபாத், மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com