'1000 வழக்கு தொடுத்தாலும் கவலையில்லை'.. பாஜக தலைவர் ஆவேசம்

ஆயிரம் வழக்கு தொடர்ந்தாலும் பரவாயில்லை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன் என்று பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா தெரிவித்துள்ளார். 
தஜிந்தர் பால் சிங் பக்கா (கோப்புப் படம்)
தஜிந்தர் பால் சிங் பக்கா (கோப்புப் படம்)

ஆயிரம் வழக்கு தொடர்ந்தாலும் பரவாயில்லை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன் என்று பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா தெரிவித்துள்ளார். 

அரவிந்த் கேஜரிவாலின் நிர்வாகத்தால் தலைநகரான தில்லியில் போதைப்பொருள் கடத்தல், காலிஸ்தான் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக விமர்சித்தார்.

தில்லியில் கைது செய்யப்பட்டு விடுதலையான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா, தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். என் மீது ஆயிரம் வழக்குகள் தொடுத்தாலும் பரவாயில்லை. தீவிரவாதியைப் போன்று நான் கைது செய்யப்பட்டேன். 

குரு கிரந்த சாஹிப் விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்யாததை கேள்வி கேட்டது குற்றமா? தலைநகரில் போதைப்பொருள் கடத்தல் குறித்து கேள்வி எழுப்புவது குற்றமா? என்று குறிப்பிட்டார். 

மேலும், அரசியலில் சீர்திருத்தம் செய்வதாக கேஜரிவால் அரசியலுக்கு வந்தார். ஆனால் அவருடைய உண்மையான முகம் தற்போது வெளிப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com