மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 106 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கேரளத்தில் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 106 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு.
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 106 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கேரளத்தில் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 106 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு.

கேரள மாநிலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட தந்தைக்கு சிறப்பு விரைவு நீதிமன்றம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, கர்ப்பமாக்கியது, 12 வயதிற்குட்பட்ட சிறுமியை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, பெற்றோராலேயே பாதிக்கப்பட்டது என ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 25 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இருப்பினும், மொத்த தண்டனைக் காலமும் ஒரே காலத்தில் நடக்கும் என்பதால் மொத்தமாக 25 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்கப்படும்.

மேலும், நெய்யாற்றங்கரை சிறப்பு விரைவு நீதிமன்றம் அனைத்துக் குற்றத்திற்காகவும் ஓர் ஆண்டு சிறை தண்டனையையும் ரூ.17 லட்சம் அபராதமும்  விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com