லக்னௌவில் விரைவில் வருகிறது பிரம்மாண்ட லக்ஷ்மன் கோயில் 

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டது போன்று, லக்னௌவிலும்  பிரம்மாண்ட லட்சுமணன் கோயில் கட்டப்படவுள்ளது. 
லக்னௌவில் விரைவில் வருகிறது பிரம்மாண்ட லக்ஷ்மன் கோயில் 

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டது போன்று, லக்னௌவிலும்  பிரம்மாண்ட லட்சுமணன் கோயில் கட்டப்படவுள்ளது. 

ஜான்கிபுரம் விரிவாக்கத்தில் கோயிலுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெறுகிறது.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 81 அடி உயரத்தில் கோயில் கட்டப்படும் என்று ஸ்ரீ லக்ஷ்மன் பீட சேவா நியாஸின் தலைவர் பண்டிட் திரேந்திர வசிஷ்ட் கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

கோவில் கட்டுமானம் சுமார் ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்படும். மேலும் இது மீனாட்சி திவாரி மற்றும் சுனில் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் வாஸ்து விதிமுறைகளின்படி வடிவமைக்கப்படும், இக்கோயில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் என்று அவர் கூறினார்.

கோயிலில் லட்சுமணன், அவரது மனைவி ஊர்மிளா ஆகியோரின் சிலைகள் இருக்கும், மேலும் சிவன் குடும்பம் மற்றும் ராம் தர்பார் சிலைகளும் இருக்கும். கோவில் வளாகத்தின் ஒரு பகுதியாக ஊர்மிளா பெயரில் முதியோர் இல்லம் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com