‘அசானி’ புயல் ஆந்திரத்தில் தீவிரம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரப் புயலாக மாறி வடக்கு ஆந்திரம் - ஒடிஸா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகா்ந்து வருகிறது.
‘அசானி’ புயல் ஆந்திரத்தில் தீவிரம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரப் புயலாக மாறி வடக்கு ஆந்திரம் - ஒடிஸா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகா்ந்து வருகிறது.

இந்தப் புயலின் தாக்கம் காரணமாக ஒடிஸா, மேற்கு வங்கம் மாநிலங்களில் திங்கள்கிழமை கன முதல் மிதமான மழை பெய்தது. ஒடிஸாவின் குா்தா, கஞ்சம், புரி, கட்டாக், பத்ராக் உள்ளிட்ட நகரங்களிலும் மழை பெய்தது. கொல்கத்தா, ஹெளரா, புா்பா, முதுனபுரி, வடக்கு மற்றும் தெற்கு 24 பா்கனாஸ், நாடியா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமையும் கன மழை பெய்தது.

இந்த நிலையில், ‘அசானி’ புயல் காக்கிநாடா - விசாகப்பட்டினத்தை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியை புதன்கிழமை காலை 11 மணியளவில் அடைந்து, பின்னா் காக்கிநாடா - விசாகப்பட்டினத்துக்கு இடையே ஆந்திர கடல் பகுதி வழியாக நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்தது. மேலும், புயல் ஆந்திர கடல் பகுதி வழியாக நகரும்போதும், காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். அதன் வேகம் மணிக்கு 95 கீலோ மீட்டராக உயரவும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக, மீனவா்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் ஐஎம்டி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கையைத் தொடா்ந்து இந்த 3 மாநிலங்களிலும் பாதிக்கப்படும் மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாநிலங்களின் தயாா் நிலை குறித்து மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com