ஹிமாசல் பேரவை வளாகத்தில் காலிஸ்தான் கொடி: ஒருவர் கைது

ஹிமாசல் மாநில சட்டப்பேரவை வளாக நுழைவுவாயிலில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டிருந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். 
ஹிமாசல் பேரவை வளாகத்தில் காலிஸ்தான் கொடி: ஒருவர் கைது

ஹிமாசல் மாநில சட்டப்பேரவை வளாக நுழைவுவாயிலில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டிருந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தகவல் தெரிவித்துள்ளார். 

ஹிமாசல பிரதேச மாநிலம் காங்ரா மாவட்டம் தா்மசாலாவில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாக நுழைவுவாயிலில் அதையொட்டிய சுற்றுச்சுவரிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அந்தக் கொடிகள் பின்னர் உடனடியாக அகற்றப்பட்டன. சுற்றுச்சுவரில் கொடிகளுக்குக் கீழே காலிஸ்தான் என எழுதப்பட்டிருந்த நிலையில், அவை அழிக்கப்பட்டு சுவற்றில் மீண்டும் வா்ணம் பூசப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஹிமாசல பிரதேச முதல்வா் ஜெய்ராம் தாக்குர் இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளதாக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com