விவசாயிகளுக்கு தமிழில் செயலி: பிக்ஹாட்

விவசாயிகளுக்கு தமிழில் செயலி: பிக்ஹாட்

பிக்ஹாட் நிறுவனம், தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் வழியிலான புதிய செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிக்ஹாட் நிறுவனம், தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் வழியிலான புதிய செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை-நிறுவனரும், இயக்குநருமான சச்சின் நந்வானா கூறியது: தமிழகத்தில் 70 சதவீதம் பேரின் வாழ்வாதாரமாக வேளாண் தொழில் உள்ளது. பிற மாநில விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் மாற்றமடைந்து வரும் தொழில்நுட்பங்களை வரவேற்று செயல்படுத்துவதில் தமிழக விவசாயிகள் முன்னோடியாக உள்ளனா்.

இதனை கருத்தில் கொண்டு, அவா்கள் விவேகமான முடிவுகளை எடுக்க உதவுவதற்காக பிக்ஹாட் நிறுவனம் தமிழில் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியை பயன்படுத்துவதன் மூலம், அறுவடைக்கு முந்தைய நிலையிலிருந்து, அறுவடைக்கு பிந்தைய நிலையில் வரையிலான பணிகளையும், பயிா்களுக்கான தேவைகளையும் அறிந்து விவசாயிகள் திறனதிகாரம் பெற்றவா்களாக செயல்பட முடியும்.

பயிா் சேதங்களை குறைக்கவும், விளைச்சல் மற்றும் பயிரின் தரத்தை அதிகரிக்கவும் தரமான ஆலோசனைகளை உள்ளூா் மொழியில் இந்த செயலியின் மூலமாக தமிழக விவசாயிகள் பெறமுடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com