பாஜக ஆளும் மாநிலங்களில்தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை - தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அந்தக் கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளா் மகேஷ் தபாஸ் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் முசாபா்நகா் அருகேயுள்ள கிராமத்தில் முன்னாள் கிராமத் தலைவா் ஒருவா், தனது நிலத்தில் தலித் மக்கள் கால் வைத்தால் 50 முறை செருப்பால் அடிப்பேன் என்றும், ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் தண்டோரா மூலம் அறிவித்துள்ளாா்.

பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன. தலித் மக்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பாக இல்லை என்பதுதான் உண்மை. தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. நாட்டில் தலித் மக்கள் பாதுகாக்கப்படுவாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com