
கோப்புப்படம்
ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் யமுனா விரைவு சாலையில் இன்று கார் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நொய்டாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க: | கரோனா விட்டாலும் அது விடுவதில்லையாம்: ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி
காயமடைந்தவர்கள் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.