ஹிமாசல் பேரவை வாயிலில் காலிஸ்தான் கொடியைக் கட்டியவர் கைது

ஹிமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ள சட்டப்பேரவையின் பிரதான வாயில் முன்பு காலிஸ்தான் பயங்கரவாத இயக்கக் கொடியைக் கட்டி வளாகச் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை

ஹிமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ள சட்டப்பேரவையின் பிரதான வாயில் முன்பு காலிஸ்தான் பயங்கரவாத இயக்கக் கொடியைக் கட்டி வளாகச் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுதிய நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 இதுதொடர்பாக மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் தர்மசாலாவில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் பிரதான வாயில் முன்பு காலிஸ்தான் இயக்கக் கொடியை வைத்து ஞாயிற்றுக்கிழமை பறக்கவிட முயற்சி செய்தனர். அத்துடன் பேரவை வளாக சுவர்களில் காலிஸ்தான் முழக்கங்களை எழுதியிருந்தனர்.
 இதில் சம்பந்தப்பட்ட பஞ்சாபை சேர்ந்த ஹர்விர் சிங் என்ற இளைஞரை போலீஸார் புதன்கிழமை காலை கைது செய்தனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தலைமறைவான மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார். அனைத்து சட்ட விதிகளின்படி ஹர்விர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார் என அதில் தெரிவித்துள்ளார்.
 பஞ்சாபிலிருந்து காலிஸ்தானுக்கு தனி நாடு கோரி "சீக்கியர்களுக்கு நீதி வேண்டும்' என்ற அமைப்பு போராடி வருகிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகும். சமீபத்தில் இந்த அமைப்பின் தலைவரும், வழக்குரைஞருமான குர்பந்த்வாந்த் சிங் மீது ஹிமாசல பிரதேச மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் பஞ்சாப்- ஹிமாசல பிரதேச மாநில எல்லைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com