ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: 3 அரசு அதிகாரிகள் பணி நீக்கம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்த 3 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: 3 அரசு அதிகாரிகள் பணி நீக்கம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்த 3 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் அல்டாஃப் ஹூசைன் பண்டிட், பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியராக பணிபுரியும் முகமது மஹபுல் ஹஜாம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் காவலாளியாக பணியாற்றி வரும் குலாம் ரசூல் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததையடுத்து இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவியவர்களை கண்டுபிடிக்கும் விதமாகவும், தீவிரவாத செயல்பாடுகளை குறைக்கும் விதமாகவும் தீவிரவாத அமைப்புகளை அடையாளம் காணும்  முயற்சி முன்னெடுக்கப்பட்டது. 

பண்டிட், தீவிரவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாம் (Jel)  உடன் சம்பந்தப்பட்டுள்ளார். தீவிரவாத பயிற்சி பெறுவதற்காக எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீர் விடுதலை அமைப்பில் 3 ஆண்டுகளாக தீவிரமாக இருந்துள்ளார். பின்னர், அவர் 1993 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். அதே போல ஜமாத்-இ-இஸ்லாம் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் தீவிரமாக இருந்துள்ளார். கடந்த 2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தீவிரவாதிகளை கைது செய்ததற்கு எதிராக போராட்டத்தை ஏற்பாடு செய்ததில் முக்கிய நபராக இருந்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் நிர்வாக உறுப்பினராக ஆனார். அந்தப் பதவியை பயன்படுத்தி மாணவர்களை தீவிரவாதத்தில் ஈடுபடுத்துவதில் முக்கியப் புள்ளியாக இருந்தார்.

மஹபுல் ஹஜாம் மக்களிடத்தில் தீவிரவாத கருத்துகளை பரப்பி வன்முறையில் ஈடுபட செய்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் காவல் நிலையம் ஒரு குழுவினால் தாக்குதலுக்கு உள்ளானது. அதன் பின்னணியில் மஹபுல் இருந்துள்ளார். பள்ளி ஆசிரியராக இருந்த போதிலும் தீவிரவாத கருத்துகளை பரப்புவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார்.

குலாம் ரசூல் தீவிரவாதத்தினை மறைமுகமாக ஆதரித்து வந்துள்ளார். தீவிரவாத அமைப்பிற்கு ஒரு உளவாளியாக செயல்பட்டு அரசின் தீவிரவாதத்திற்கு எதிராக எடுக்கும் முக்கிய முடிவுகளை அந்த அமைப்புடன் பகிர்ந்துள்ளார். மேலும், ரசூல் ஹிஜ்புல் முஜாஹீதின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அஹமது ஔரங்கசீப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 311 (2) (c)- ன் படி தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததால் இந்த மூவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com