கோவாவில் அமித் ஷா குடித்த குடிநீர் பாட்டீல் விலை..?

மத்திய உள்துறை அமைச்சர் கோவா வந்திருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட ஒரு குடிநீர் பாட்டீலின் விலை ரூ.850 என்று விவசாயத் துறை அமைச்சர் ரவி நாயக் தெரிவித்துள்ளார்.
கோவாவில் அமித் ஷா குடித்த குடிநீர் பாட்டீல் விலை..?
கோவாவில் அமித் ஷா குடித்த குடிநீர் பாட்டீல் விலை..?


பனாஜி: மத்திய உள்துறை அமைச்சர் கோவா வந்திருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட ஒரு குடிநீர் பாட்டீலின் விலை ரூ.850 என்று விவசாயத் துறை அமைச்சர் ரவி நாயக் தெரிவித்துள்ளார்.

அந்த குடிநீர் பாட்டீல், பனாஜியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு நகரப் பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்டதாகவும் ரவி நாயக் தெரிவித்துள்ளார்.

கோவாவில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், குடிநீர் பற்றாக்குறை என்பது எந்த அளவுக்கு அபாயகரமானதாக மாறுகிறது, நீர்நிலைகளை பாதுகாப்பது எதிர்காலத்துக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் வலியுறுத்திப் பேசிய விவசாயத் துறை அமைச்சர் ரவி நாயக், இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் பேசுகையில், கோவாவில் பேரவைத் தேர்தலுக்கு முன்பு, கடந்த பிப்ரவரி மாதம் பிரசாரம் மேற்கொள்ள வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹிமாலயா (பிராண்ட்) நிறுவனத்தின் குடிநீர் பாட்டீலை வரவழைத்துத் தருமாறு கூறியிருந்தார். அவர் கேட்டிருந்தபடி, பனாஜியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் மபுசா என்ற நகரத்திலிருந்து அந்த குடிநீர் பாட்டீல்கள் வரவழைத்துக் கொடுக்கப்பட்டது.

அமித் ஷாவுக்காக வாங்கப்பட்ட குடிநீர் பாட்டீல்களின் விலை ஒவ்வொன்றும் ரூ.850 என்று குறிப்பிட்டார் அமைச்சர்.

கோவாவின் முன்னாள் முதல்வராக இருந்த ரவி நாயக், நதிகளுக்கு இடையே அணைகளைக் கட்டுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். அப்போதுன், அரபு நாடுகளுக்கு எரிபொருளுக்கு மாற்றாக குடிநீரை விற்பனை செய்யலாம் என்றும் கூறினார்.

குடிநீர் பற்றாக்குறையால், வருங்காலத்தில் மக்கள் குடிநீருக்காக போராடும் நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com