
மேகாலயத்தில் கனமழை; பல இடங்களில் நிலச்சரிவு (கோப்புப்படம்)
ஷில்லாங்: மேகாலய மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்களில் கடும் நிலச்சரிவு நேரிட்டுள்ளது. மாநிலத்தில் ஓடும் பெரும்பாலான நதிகள் அபாய கட்டத்தைத் தாண்டி ஓடுகிறது.
வியாழக்கிழமை இரவு முதல் மேகாலயத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய காத்திருப்பவரா? அருமையான வாய்ப்பு
நிலச்சரிவை சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வங்கக் கடலிலிருந்து அதிகப்படியான ஈரப்பதம் நிலப்பரப்புக்குள் ஈர்க்கப்படுவதால் மழைப் பொழிவு இருப்பதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.