'பிரதமர் மோடி ஏன் பத்திரிகையாளர்கள் முன் வருவதில்லை? - மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் மோடி ஏன் பத்திரிகையாளர்களுக்கு முன்னால் வருவதில்லை என தனக்குப் புரியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் மோடி ஏன் பத்திரிகையாளர்களுக்கு முன்னால் வருவதில்லை என தனக்குப் புரியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கருத்தாய்வுக் கூட்டம் இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. 

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்தது. இதையடுத்து காங்கிரஸ் செயற்குழு கூடி இதுகுறித்து விவாதித்தது. 

தொடர்ந்து வருகிற 2024 பொதுத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கருத்தாய்வுக் கூட்டம் இன்று(வெள்ளி) முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. 

கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம், ''பிரதமர் மோடி, ஏன் பத்திரிகைகளுக்கு முன்னால் வருவதில்லை என்று எனக்குப் புரியவில்லை. நமது ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றுவது முக்கியம். எதிர்ப்புகளை அடக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். நமது பேச்சுரிமையை பாதுகாக்க வேண்டும்' என்று தெரிவித்தார். 

மேலும், 'எங்களிடமே பணம் இல்லை என்றால் கூட்டாளிகள் முதலீடு செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவே பிற கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முன்னால் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும். அதன்பின்னர் பயணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். ஒத்த கொள்கைகளைக் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்' என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com